சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் அருகில் உள்ள இ சேவை மையங்களில் https://www.tnesevai.tn.gov.I என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.