பசி போக்குவதன் மூலம் அறிவுமிக்க சமூகமாக மாணவர்களை வளர்த்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை இத்திட்டம் தவிர்ப்பதாகவும், பசி, பிணி போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டார். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதில் மிக மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்