பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” படத்தின் முதல் பாடலான ‘மினிக்கி மினிக்கி’ வரும் 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கேஜிஎப்-க்கு தங்கம் எடுக்க செல்லும்வழியில் தனது குழு மக்களுடன் மகிழ்ச்சியாக விக்ரம் ஆட்டம் போடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ஏற்கெனவே ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்பாடல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.