பிஹாரில் ஹரிஷங்கர் என்பவர், மின்கட்டணம் ₹500 செலுத்தியும் வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், ரசீதை தரவிறக்கம் செய்து பார்த்தபோது, இன்னும் கட்ட வேண்டிய தொகை ₹52.43 லட்சம் என இருந்ததை கண்டு அதிர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெறுவதால் இந்த தவறு நடந்துள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.