மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது. அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் இன்று முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார்.