புனேவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திர பலெக்கர் என்பவர் குளித்துவிட்டு இரும்பு கம்பியிலான கயிற்றில் துணி காய வைக்கும் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற வந்த அவரின் மனைவி மற்றும் மகனா ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இரவு பெய்த கனமழையால் பக்கத்து வீட்டு மின்சார ஒயர் அறுந்து இவர் வீட்டின் தகரக் கூரையின் மேல் விழுந்த நிலையில் மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.