வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்ட 10,042 பேர் 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலியாறு ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததில் 67 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.