இலங்கை சிறையில் வாடும் குடும்பங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மீனவ குடும்பங்களுக்கான தின உதவித் தொகை ரூ.250லிருந்து ரூ.350ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ 5 லட்சம் என்பது ரூ.6 லட்சமாகவும், நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கான நிவாரணம் ரூ 1.5 லட்சம் என்பது 2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.