மானிய விலையில் கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6500 இல் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்படும். மழைக்கால நிவாரணம் மூவாயிரம் ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தப்படும். பிரதமரின் காப்பீடு திட்ட வரம்பில் வராத எஸ்சி எஸ்டி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.