இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் ஷமி – சானியா இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சானியாவின் தந்தை இம்ரான் இது பொய் தகவல் என்றும் ஷமியை அவர் நேரில் கூட பார்த்தது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.