நாளை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல முல்லை பூ கிலோ 400 ரூபாய், கனகாம்பரம் 500 ரூபாய், அரளிப்பூ 250 ரூபாய், சாமந்தி மற்றும் ரோஜா கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப் போலவே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான சில பொருட்களும் விலை ஏற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.