முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 43,131 சத்துணவு மையங்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க ரூபாய் 4.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.