2023 24 நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு (ஜூலை 31) நெருங்கி வருகிறது. இதனால், பலரும் தங்கள் வருமான வரி கணக்கை இணையதளத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், IT இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ITR தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். 26AS, AIS, TIS படிவங்களை பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கில் எழுந்துள்ளது.