நீட் ரத்து தொடர்பான தமிழக அரசின் தீர்மானம், பயனற்ற அரசியல் வித்தை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனக் கூறியுள்ள அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நீட் ரத்து தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.