கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கண்டித்தும் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.