பாடத்திட்டங்கள் முறையாக இல்லாததால் தமிழகத்தில் திறன்மிக்க நபர்கள் குறைந்து வருவதாக அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வதில் தவறில்லை. ஆனால் அது தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்ட லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ தான் என்ற விமர்சித்துள்ளார்.