33ஆவது ஒலிம்பிக்கில் சீனா அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவு இறுதிப் போட்டியில், தென்கொரியாவை சீனா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரிய வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன்மூலம், 2024 ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப்பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.