ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள “இந்தியன் 2”க்கு எதிர்மறை விமர்சனம் வந்ததை அடுத்து, டீன்ஸ் (TEENZ) படத்திற்கு மக்கள் படையெடுக்கின்றனர். முதல் நாளில் கூட்டமே இல்லாமல் இருந்த அப்படத்திற்கு மறுநாள் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து பார்த்திபன், மக்கள் திரையரங்கிற்கு வருவதை மட்டும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது என உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் வரம்பற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே, நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்! என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது! நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள் டிக்கட்டே இல்லை. எத்தனை screens? எவ்வளவு collections ? இன்று வரை நான் பார்க்கவேயில்லை. பார்க்கவும் போவதில்லை.
போதும் இந்த ஆனந்தக் கண்ணீர். கோடிகளை(2) என் கைகளில் கட்டிவிட்டாலும் நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவது இல்லை. பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப் படுத்துகிறது. தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.