முதுகலை நீட் தேர்வு இன்று காலை தொடங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் நேற்று இரவு தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்திருந்தது. தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக பல மாணவர்கள் சென்றிருந்தனர்.
புதுக்கோட்டையில் இருந்து ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு தேர்வு எழுத சென்ற 30 பேருக்கு அங்கு சென்ற பிறகுதான் தேர்வு ஒத்திவைப்பது என தெரியவந்ததால் மாணவர்கள் அவதியடைந்தனர். தேர்வு நடக்குமா இல்லையா என்பது தெரியாமல் பல ஊர்களில் மாணவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.