இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, தேசிய தேர்வு முகமை நேற்று இரவு அறிவித்தது. கடைசிநேர அறிவிப்பால், தேர்வுக்கு தயாரானவர்கள் கடும் பாதிப்படைந்தனர். குறிப்பாக, தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து நீண்டதூரம் பயணித்தவர்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதுபோன்ற அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.