முன்னாள் அமைச்சர் அரங்கநாயகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த அவர் 1.15 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிறை தண்டனை பெற்றார். அதன்மூலம் முறையீட்டு மனுவில் தண்டனையை ஹை கோர்ட் உறுதி செய்துள்ளது. அரங்கநாயகம் இறந்து விட்டதால் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.