முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அக்கட்சி ஒரு தேர்தலில் கூட தோல்வியடையவில்லை. 2019ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தல், இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என 9 தேர்தல்களை திமுக சந்தித்துள்ளது. அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடியிருப்பதாக திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.