நாட்டில் நிலவும் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பொதுநல மனு மீது கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அறிவுப்பூர்வமான சிந்தனையைவளர்க்க கல்வி மிக அவசியம், கல்வி அறிவு பெற்ற ஒருவர் இயல்பாகவே மூடநம்பிக்கைகளுக்குள் செல்லமாட்டார். நீதிமன்ற மனுக்கள் மூலம் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்காது என தெரிவித்துள்ளது.