ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கொரோனா காலகட்டத்தில், x (ட்விட்டர்) தளத்தைப் போன்ற ‘ஹூட்’ (hoote) என்ற செயலியைத் தொடங்கினார். இதற்கு நடிகர் ரஜினியும் ஆதரவு அளித்தார். ஆரம்பத்தில் வரவேற்பைப் பெற்ற இந்த செயலிக்கு, நாளடைவில் வரவேற்பு இல்லாமல் போனது. இதன் காரணமாக விரைவில் இந்த செயலி மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து சௌந்தர்யா தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.