ஆடி மாதத்தில் மூத்த குடிமக்களை சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு இலவசமாக ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமுள்ள அறுபது வயதிற்கும் மேற்பட்டோர் https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.