தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை ரேஷன் கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்த கூடாது என்று உணவு வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைப் போலவே ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள் அதற்கு உண்டான அங்கீகார படிவத்தை நிரப்பி குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.