கேரளாவில் 14 வயது சிறுவன் மூளை திண்ணும் அமீபாவால் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் அபூர்வமாக காணப்படும் இந்த அமீபா, மூக்கு வழியாக மனித உடலில் நுழைந்து மூளையை செயலிழக்க செய்கிறது. தலைவலி, காய்ச்சல், வாந்தி ஆகியவை இந்த நோய் தொற்றின் அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல, மே மாதம் ஒரு சிறுவன், சிறுமி உயிரிழந்துள்ளனர்