இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு பிரண்டன் மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் என முன்னாள் வீரர் இயோன் மோர்கன் கூறியுள்ளார். உலகின் சிறந்த பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தை விட இங்கிலாந்து அணியை யாரும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்று பாராட்டிய அவர், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை சிறந்த அணியாக மாற்றியுள்ளதை மறந்து விடக்கூடாது என்றார். மெக்கல்லம் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.