சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை, சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பில் கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என விளக்கமளித்துள்ளார்.