காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட இதுவரை அனுமதி தரவில்லை என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கான காவிரி நீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அணைக்கட்டியே தீருவோம் என பிடிவாதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.