மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி புதிய ரயில் சேவை இன்று (ஜூலை 19) முதல் தொடங்கியது. ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த சிறப்பு ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். நாளை 20ஆம் தேதி முதல் சனி, வியாழக்கிழமைகளில் தூத்துக்குடியிலிருந்து இரவில் 10.50 மணியளவில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரயில்வே சார்பில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.