மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் ஐந்து அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியிலிருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 115.10 அடியை தாண்டி உள்ளது. நேற்று மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. தற்போது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.