மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 20,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு, டெல்டா பாசனம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை கொள்ளளவு 120 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், மேட்டூருக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.