நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏனைய நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, பல்வேறு புகார்கள் எழுந்ததால், திமுக மேயர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.