மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர்க்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது மேலும் பலத்த காயமடைந்தோருக்கு ரூபாய் 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.