மைக்ரோசாஃப்ட் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், இந்தியா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பயணம் செய்ய முடியாமல் விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவும், பயணிகளிடம் ஊழியர்கள் கனிவாக நடந்துகொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.