மைக்ரோசாப்ட் நிறுவன சாஃப்ட்வேர்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளின் GDP இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கி சேவைகள் ஆகியவை முடங்கியுள்ளதால், அவர்களுக்கு வரும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடங்கியுள்ளன.