உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கணினி சார்ந்த துறைகள் தவித்து வருகின்றன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் குழம்பியுள்ளனர். இதனால், பொருளாதார, தொலைத்தொடர்பு சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. CrowdeStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் சேவை முடங்கியதாக கூறப்படுகிறது.