தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும், பார்படாஸ் மைதான மண்ணை கேப்டன் ரோஹித் சர்மா எடுத்து சாப்பிட்ட வீடியோ வைரலானது. இதுகுறித்து ரோஹித் தற்போது விளக்கமளித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் அந்த மைதானம், பிட்ச்சை மறக்க முடியாது என்றும், அதனால் அதன் சிறுபகுதியை தன்னுள் வைத்து கொள்ள விரும்பியே மண்ணை எடுத்து சாப்பிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.