ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள படத்தை மாற்ற முதலில் அருகில் உள்ள இ சேவை மையம் சென்று விண்ணப்பத்தை பெற்று, ஆதார் எண் உள்ளிட்ட விவரத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதனை சரிபார்த்த பின்னர் பயோமெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதியப்படும். பிறகு உங்களை படம் எடுத்து ஊழியர் பதிவேற்றம் செய்வார். விரல் ரேகையை வைப்பதால் மொபைல் எண் மற்றும் அடையாள ஆவணம் தேவையில்லை. 90 நாட்களில் உங்கள் புகைப்படம் ஆதாரில் மாறிவிடும்.