ஒரு மொபைல் நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்கிற்கு மாறுவது MNP எனப்படும். இதை எவ்வாறு மேற்கொள்வது என தெரிந்து கொள்வோம். முதலில் மெசேஜ் பகுதியில் PORT என்று டைப் செய்து 10 இலக்க மொபைல் எண்ணை பதிவிட்டு 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதனை அடுத்து வரும் UPC எண்ணுடன் வேறு நெட்வொர்க் டீலரை சந்தித்து கேஒய்சி விவரத்துடன் விண்ணப்பித்தால் மூன்று அல்லது நான்கு நாட்களில் நெட்வொர்க் மாறிவிடும்.