கஸ்டம்ஸ் அதிகாரிகள் போலப் பேசி மோசடி செய்வோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, CBIC எச்சரித்துள்ளது. சமீப நாள்களாக, செல்ஃபோன் வழியாகத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக மிரட்டி மக்களிடம் பணம் பறித்து வருகின்றனர். அதுபோன்ற அழைப்புகள் வந்தால், www.cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என CBIC தெரிவித்துள்ளது