கரூரில் போலி ஆவணம் மூலமாக ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக பாதிக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து அவரது ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. இந்த நிலையில் தனக்கும் அவரது சகோதரருக்கும் முன்ஜாமின் வழங்க கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த விசாரணை விரைவில் வரவிருக்கிறது.