கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழக் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.