மாநிலங்களவையில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷை தாக்கி பேசுவது போன்று இருந்ததற்கு, எப்போதும் போல் ‘மூன்றில் ஒரு பங்கு’ என பிரதமர் திரித்து பேசுகிறார். மூன்றில் ஒரு பங்கு என்பது அவரது ஆட்சிக்காலத்தை குறிப்பதல்ல. இது உயிரியல் ரீதியாக பிறக்காத நமது பிரதமரை குறிக்கிறது. ஜூன் 4-ம் தேதி தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக பிரதமர் மோடி தோல்வி அடைந்த பிறகு, அவரது செல்வாக்கு மூன்றில் ஒரு பங்காக சரிந்துள்ளது. மேலும் அவர் தனது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக வேறு இரண்டு N-களை நம்பியிருக்கிறார். எனவே அவரது அரசு நீடிக்காது, எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.