நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இது தொடர்பாக பேட்டியளித்த அவர், சில குளறுபடிகள் நடந்ததன் காரணமாக அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கூறுவது தவறானது என்றார். மேலும் அவர், யார் நினைத்தாலும் நீட் தேர்வை தவிர்க்க முடியாது, இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என உறுதியாக கூறியுள்ளார்.