ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இந்த முறை கணினி வழியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. சிஐஎஸ்ஆர் – யுஜிசி நெட் தேர்வும் ஜுலை 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும். என்சிஈடி தேர்வு, ஜுலை 10ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.