சர்வதேச அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தேர்வு செய்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஏ.பி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ராத், வாசிம் அக்ரம், ஆண்ட்ரூ ஃபிளிண்டாப் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் 12ஆவது வீரராக தன்னைத் தானே யுவராஜ் தேர்வு செய்தார்.