பிரபல யூடியூபர் ரபி (the biriyani man) லைவ்-இல் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக யூடியூபர்கள் இர்ஃபான், டெய்லர் அக்கா (தயாளு டிசைன்ஸ்) ஆகியோரை பிரியாணி மேன் வம்பிழுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு எதிராக A2D உள்ளிட்ட சில யூடியூபர்கள் வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று லைவ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென தூக்குபோட முயன்ற ரபியை, அவரது தாயார் தடுத்து நிறுத்தினார்.