யோகா, இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 5க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் & ஓமியோபதி இயக்குனரகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.